Thursday, July 25, 2013

இரண்டு வேடம் போடும் கருனா(க)நிதி இஸ்லாமியர்களே ஏமாறாதீர்....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை.

சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து போட்டால்.. திமுக எம்.பி.களுக்கு கருணாநிதி எச்சரிக்கை!

 இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்கா செல்ல "விசா" அளிக்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கையெழுத்தினை தாங்கள் போடவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்தப் பிரச்சினையிலே அமெரிக்கக் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறிய போதிலும், அவ்வாறு கையெழுத்திடுவதை தலைமைக் கழகம் ஏற்கவில்லை. அவ்வாறு கையெழுத்திட்டு அனுப்புவது கழகத்திற்கு ஏற்புடையதல்ல! தலைமைக் கழகத்தைக் கலந்து பேசாமல் எவறேனும் அவ்வாறு கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

THANKS : THATSTAMIL

Friday, July 12, 2013

2002 கலவரமும் கார் டயரில் சிக்கிய நாய்க்குட்டியும்!- நரேந்திர மோடியின் ஒப்பீடு

அகமதாபாத்: நான் ஒரு இந்து தேசியவாதிதான். அதில் எந்தத் தவறும் இல்லையே என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் 2002 கலவரங்கள் பற்றி கருத்து கூறுகையில், "ஒரு நாய்க்குட்டி கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மனவேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான்," என்று கருத்து தெரிவித்துள்ளார் மோடி
காந்திநகரில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். 
 
அப்போது, குஜராத் கலவரம் தொடர்பாக பலரும் தங்கள் மீது குற்றம் சாட்டியபோது உங்கள் மனநிலை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், "நான் ஏதாவது தவறு செய்திருந்தால்தான், நான் குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். 'நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடிவிட்டதால் சிக்கிக்கொண்டு விட்டோம்' என்பது போல் நினைக்கும்போதுதான் எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால், எனது விஷயம் அப்படிப்பட்டது அல்ல. நடந்த சம்பவங்களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது. எனினும், ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் இருக்கையில் நாம் அமர்ந்திருந்தாலும் சரி, ஒரு நாய்க்குட்டி கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மனவேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான். நான் முதல்வராக இருக்கிறேனோ, இல்லையோ, அடிப்படையில் நான் ஒரு மனிதன். எங்காவது கெட்டது நடந்தால், அது வருத்தம் தருவது இயற்கைதான். கலவரம் நடந்தபோது, அதை ஒடுக்குவதற்காக நான் எடுத்த நடவடிக்கைகள் சரியானவைதான். அதில் நான் செய்த தவறு என்ன? ஆண்டவன் நமக்கு அளித்துள்ள சிந்திக்கும் ஆற்றல், நான் பெற்றுள்ள அதிக அளவிலான அனுபவம், அந்தச் சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த வசதிகள் ஆகியவற்றைச் சிறப்பான அளவுக்குப் பயன்படுத்தினேன். அதையே சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஆராய்ந்தது. நான் அப்போது எந்தத் தவறும் செய்யவில்லை. நாட்டு அரசியலை இரு துருவங்களாக்கும் நபர் என்று என் மீது வைக்கப்படும் விமர்சனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இரு துருவங்களாகத்தான் உள்ளன. இத்தகைய தன்மை ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும். நான் ஒரு தேசியவாதி, தேசபக்தன். நீங்கள் என்னை ஹிந்து தேசியவாதி என்று அழைத்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில் நான், வளர்ச்சிக்காகப் பாடுபடும் நபராகவும் பார்க்கப்படுகிறேன். இந்த இரண்டு பிம்பங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான்," என்றார் மோடி.
THANKS : THATSTAMIL


Sunday, September 16, 2012

உலக முஸ்லிம்களை மிரட்டும் அமெரிக்க வெறி நாய் ஒபாமா ....



எப்போதெல்லாம் அமெரிக்காவில் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் மீது  ஏதோ ஒரு பழியை போட்டு  அதன்மூலம்  வெற்றி பெறுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கும் அமேரிக்க  வெறி நாய்கள் இப்பொழுது உலக இஸ்லாமியர்களை  சீண்டும் வகையில் ஒரு அல்சேசன் நாயை வைத்து  நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி திரைபடத்தை வெளி இட்டுள்ளார்கள். இதை எதிர்த்து கேட்டால் உலக  முஸ்லிம்களை  மிரட்டும் விதமாக பேசி இருக்கும் அமெரிக்க  வெறி  நாய் ஒபமாவின் அறிக்கை. 
 
அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட திரைப்படத்தில், இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாக கூறி, இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தூதரகங்களை குறிவைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் தூதரகங்கள் தாக்கப்படுவதுடன், அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தங்கள் நாட்டு பிரஜைகளை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தாக்குதல் நடத்துபவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்காக அவர்களின் வழியை நாங்கள் பின்பற்ற மாட்டோம். அதேசமயம் அமெரிக்காவை சீண்ட யாரையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவில் மத சுதந்திரம் உள்ளது. இஸ்லாம் உள்ளிட்ட எந்த மதத்தின் பெருமையையும் குலைக்கும் செயல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

வன்முறைகளால் எந்த நியாயமும் கிடைக்காது. அப்பாவி ஆண்களையும், பெண்களையும் குறிவைத்து தாக்குவதை மன்னிப்பது மதம் கிடையாது. எனவே எங்கள் தூதரகங்களையும், துணை தூதரகங்களையும் தாக்குவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இதுபற்றி உலகம் முழுவதிலும் உள்ள அரசுகளை தொடர்புகொண்டு, எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு உதவி செய்ய வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று கூறி வருகிறோம். இத்தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம். 

Friday, March 2, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கக்கோரி சென்னையில் மாநாடு: அப்துல்கலாம் கலந்துகொள்கிறார்

சென்னை, மார்ச்.3-
 
அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்தியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி ஏழை நாடாக ஆக்குவதே கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டகாரர்களின் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் மக்களிடம் பேசவேண்டும் என்று போராட்டக்காரர்களின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு செல்லக்கூடாது.
 
கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கவேண்டும் என்று போராடுவதால் எனக்கு அமெரிக்காவில் இருந்து போன் மூலம் மிரட்டல் வந்தது. போலீசார் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
 
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டுதான் போராடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் மீது மத்திய-மாநில அரசுகள் விசாரணை நடத்தவேண்டும்.
 
கூடங்குளம் அணுமின்உற்பத்தியை துவங்குவதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்கி மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை கருத்தரங்கம்-மாநாடு நடத்த உள்ளோம்.
 
இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள், அனைத்து ஆதரவு கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் தொழில் முதலீட்டாளர்கள் சங்க தலைவர்கள், வியாபார சங்க தலைவர்கள், விஞ்ஞானிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
 
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறினார்.
 
பேட்டியின் போது அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி அமைப்பாளர்கள் மு.கிருஷ்ணபறையனார், ஆர்.காந்தையா, பி.இளங்கோ, மயிலை சுகுமாரன், பொதுச்செயலாளர் சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Thursday, February 23, 2012

ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி, பிப்.23-

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஓரினச்சேர்ககைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது:

ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். மேலும், இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானதாகும். இது இயற்கைக்கு முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் உள்ளது. எனவே, ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.